ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை, மூடப்படும் தேவாலயங்கள்
2026-ல், ஐரோப்பாவில் கைவிடப்பட்ட தேவாலயங்கள் குறித்து, மொரோக்கா நாட்டின் புகழ்பெற்ற முன்னணி செய்தி நிறுவனமான Hespress News Agency உடைய செய்திக் குறிப்பு:
"கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும்; ஐரோப்பாவில் சுமார் 20 தேவாலயங்களும், டென்மார்க்கில் சுமார் 200 தேவாலயங்களும், ஜெர்மனியில் 515 தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன.
நெதர்லாந்தின் தேவாலயங்களில் மூன்றில் இரண்டு பங்கு விரைவில் மூடப்படும் என்று அங்குள்ள கத்தோலிக்க சமூகம் கணித்துள்ளது.
பிரிட்டனில், 1966-ஆம் ஆண்டு முதல் 10,000-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்… ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. இங்குள்ள பல தேவாலயங்கள் முஸ்லிம்களால் விலைக்கு வாங்கப்பட்டு பள்ளிவாசல்களாக மாற்றப்படுகின்றன”.
மேற்கத்தேய நாடுகளில் காணப்படும் இஸ்லாத்தின் இந்த அபார வளர்ச்சி எதை உணர்த்துகிறது?
இஸ்லாம் என்பது வணக்க வழிபாடுகளை மட்டும் பேசும் மதமல்ல. மாறாக, அது ஒரு வாழ்க்கை நெறி.
எப்படி வாழ வேண்டும் என்று தெரியால் விழி பிதுங்கி நிற்கும் மேற்கத்தேய மக்களுக்கு இஸ்லாம் ஒளி விளக்காக வழிகாட்டுகிறது.
இஸ்லாத்தால் நிம்மதியான வாழ்வுக்கு வழிகாட்ட முடியும்.
✍️ நூஹ் மஹ்ழரி.
Via - Hespress News Agency

Post a Comment