எந்தவொரு பிரஜையையும் கைவிட மாட்டோம்
"எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சரசவி திரியோ அபிமன்" - மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளைப் பாராட்டும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில்நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். மீண்டும் ஒரு போர் ஏற்படாத வகையில் செயலாற்றி வரும் ஓர் அரசாங்கம் என்ற வகையிலும், போர் ஏற்படுவதற்கான காரணிகளை அகற்றி வரும் ஓர் அரசாங்கம் என்ற வகையிலும் இந்நிகழ்ச்சித் திட்டத்தை இந்தப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.

Post a Comment