மொட்டுக்கட்சியின் கையாளாக UNP, எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நம்பவில்லை
UNP இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக்கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக UNP யின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
UNP யில் இன்று நான் இல்லை. ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, UNP இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது.
தற்போதைய சூழ்நிலையில் UNP க்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

Post a Comment