Header Ads



ரவிக்கு வெளிநாடு பறக்கத் தடை, பிணையில் போகச்சொன்ன நீதிமன்றம்


இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இன்று (31) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டம் ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டார்.


அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.