Header Ads



பிறர் உயிர்வாழ தன் சொந்த உயிரை, தியாகம் செய்த ராஜேஷ்


கேரள வெள்ளத்தில் முதியவரை காப்பாற்ற தனது லைப் ஜாக்கெட்டையே கழற்றிக் கொடுத்து, பின்னர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் தயாகம் செய்திருக்கிறார் 36 வயதான  ராஜேஷ். 


ஆகஸ்ட் 1 ஆம் தேதி, காரியங்கோட்டு ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், பென்னி (61) என்ற முதியவர் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். தகவலை அறிந்த ராஜேஷ், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டார். சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் தத்தளித்த முதியவரை காப்பாற்ற துணிச்சலாக ஆற்றில் குதித்தார்.  முதியவர் நிச்சயம் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, தான் அணிந்திருந்த உயிர்காக்கும் லைப் ஜாக்கெட்டைக் கழற்றி முதியவருக்கு மாட்டினார்.


ராஜேஷின் இந்தத் தியாகத்தால் முதியவர் பத்திரமாக கரைசேர்க்கப்பட்டு உயிர் தப்பினார். ஆனால், லைப் ஜாக்கெட் இல்லாத நிலையிலும், பலத்த நீரோட்டம் காரணத்தினாலும் ராஜேஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட, 3  நாட்களுக்கு பிறகு ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. 


பிறர் உயிர் வாழத் தன் சொந்த உயிரையே தியாகம் செய்த இந்த உண்மையான கதாநாயகனுக்கு ஒட்டுமொத்த  கண்ணீர் அஞ்சலி

No comments

Powered by Blogger.