Header Ads



நாம் அறியாத ஒரு உலகம்


இஸ்மாயில் ஹனியே வாழ்ந்த வாழ்க்கை நாம் அறியாத ஒரு உலகம். ஓர் அகதி முகாமில், ஆக்கிரமிப்புகளின் நிழலிலேயே கழிந்தது அவருடைய சிறுவயது. எத்தனையோ கரடுமுரடான போராட்டங்களை, தன் ஆழமான இறைநம்பிக்கை தந்த மனநிறைவாலே வென்றெடுத்த ஒரு புரட்சியாளர் அவர்.


சியோனிச பயங்கரவாத இஸ்ரேலியத் தாக்குதலில் தன் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டபோதும், 'இறைவா! அவர்கள் மீது கருணை காட்டுவாயாக!' என்று அமைதியாகப் பிரார்த்தித்தார். வாழ்வையும் மரணத்தையும் தாண்டிய ஒரு உயரிய இறைநம்பிக்கையை அந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்தின.


 நம்பிக்கையின் சுவையைத் தன் வாழ்நாள் முழுவதும் உணர்ந்து வாழ்ந்த ஒரு வீரரின் வாழ்க்கை அது.


வாழ்க்கை என்பது சுகமாக வாழ்ந்து முடிப்பது மட்டுமே' என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், நாம் பயணிக்க வேண்டிய உண்மையான பாதையை நினைவூட்ட சில மனிதர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இந்தச் சிறிய உலகத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதை அவர்கள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.


 இஸ்மாயில் ஹனியே போன்ற மனிதர்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவார்கள். உண்மையான இறைநம்பிக்கை துடிக்கும் நரம்புகளில் இருந்து தியாகிகள் பிறந்துகொண்டே இருப்பார்கள். பயந்து நடுங்கும் கோழைகளுக்கு இந்த நம்பிக்கையின் மொழி புரிய வாய்ப்பில்லை!


பிரபல இஸ்லாமிய தத்துவஞானி உஸ்தாத் தாஹா அப்துர்ரஹ்மான் அந்த மகத்தான தியாகத்தைப் பற்றி இப்படி எழுதினார்:


*'இஸ்மாயில் ஹனியே தன் வாழ்வாலும் மரணத்தாலும் இறைவழியில் சாட்சியாக (ஷஹீதாக) நின்றவர். அந்த இரண்டு தியாகங்களுக்காகவும் இறைவன் அவருக்கு நற்கூலி வழங்கி அருள்புரிவானாக.'*


ஆமீன்!


**அஸ்ஸலாமு அலைக்கும் யா ஷஹீத்!  💚🫂


இஸ்மாயீல் ஹனியே உயிர் தியாகத்திற்கு  (2024 ஜூலை 31) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன.


Waseem Rs

No comments

Powered by Blogger.