Header Ads



புத்தளம், பேருவளை, நீர்கொழும்பு மக்களின் கவனத்திற்கு



கொழும்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து வருவதாகக் கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.


தற்போது நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையைக் கருத்திற்கொண்டு, இந்த கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாகப் புத்தளம் வரையிலான கடற்பரப்பை நோக்கி அடித்துச் செல்லப்பட்டு, கரைசேரும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் ஈடுபடுவோர் மற்றும் கடற் பயணங்களை மேற்கொள்பவர்கள் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மிதக்கும் கொள்கலன்கள் எவையேனும் தென்பட்டால் அதுகுறித்து உடனடியாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலிச் செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள கடற்றொழில் துறைமுக அதிகாரிகளுக்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.