Header Ads



மஹர சிறைச்சாலை வன்முறை - அமைச்சர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்கள்


மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். 


இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் ஒரு அலை போல பரவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு, மேலும் 2  அல்லது 3 சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கிடைத்த தகவல்களும் சிறைச்சாலைகள் திணைக்களத் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ள


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தொடர்பான தகராறு என்றபோதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் கைதிகளால் நிர்வாகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்று.


ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் கைதிகள் திரண்டுவந்து, இதுவரை இல்லாத வகையில் தீ வைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதன் பின்னணியில் அமைக்கப்பட்ட சதிக்குழு ஒன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயல் இடம்பெற்றிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார். 


அத்துடன், தீ வைத்து அழிக்கப்பட்டது மக்களின் வரிப்பணம் என்பதையும், அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியதும் அதே பணத்தில்தான் என்பதையும் கைதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.