Header Ads



பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் விசேட கலந்துரையாடல்,


பணம் தூய்தாக்கல் மற்றும்  பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04)  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.


அதற்காக மதிப்பீட்டுக் குழுவின் கள ஆய்வானது இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் சில மாதங்களுக்குள் குறித்த பரிந்துரைகளை முறையாகச் செயற்படுத்துவதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் மூலம் குறித்த செயல்முறையை வெற்றியடையச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.