Header Ads



மகளுக்கு பிறந்தநாள் கேக் வாங்குவதற்காக, ஒய்வுபெற்ற அதிபர் கொலை


நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்குப் வாங்குவதற்காக வீட்டில் இருந்த  69 வயதான ஓய்வுபெற்ற விமலானி என்ற பெண் அதிபரை அடித்துக் கொலை செய்துள்ளார்.


இரத்தினபுரி - இறக்குவானையில் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்கத் தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார்.


திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.