வரம்பற்று எரிபொருளை பயன்படுத்தியவர்கள்
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் சபாநாயகரால் சராசரியாக மாதந்தோறும் முறையே 3,994 லீட்டர் மற்றும் 6,122 லீட்டர் வரை எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் பயன்பாட்டு அதிகரிப்பானது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 66 சதவீதம் மற்றும் 155 என்றளவில் பாரிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் சபாநாயகரின் எரிபொருளுக்காக வருடத்திற்கு ரூ. 19,373,866 செலவிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ரூ. 26,045,103 செலவிடப்பட்டுள்ளது. ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது கணிசமான அளவு அதிகரிப்பாகும.
இந்த கணக்காய்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 9-வது நாடாளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட 3 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருளுக்கு மேலதிகமாக அவரது தனிப்பட்ட சொகுசு காரிற்காக ரூ. 8,545,032 பெறுமதியான 21,299 லீட்டர் எரிபொருள் பெறப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 2 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,515 லீட்டர் எரிபொருள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2024 இற்கு இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ரூ. 6,071,690 பெறுமதியான 15,063 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்.
இதன் வருடாந்த சராசரி 5,021 லீட்டர்களாகும். தற்போது அரச சேவையில் அதிகபட்ச எரிபொருள் நுகர்வைக் கொண்ட அமைச்சின் செயலாளரின் பதவியைக் கருத்திற்கொள்ளும்போது இது சுமார் 2,300 லீட்டர் மேலதிகப் பயன்பாடாகும்.

Post a Comment