NPP நகர சபை உறுப்பினரின் மகன் போதைப்பொருளுடன் கைது
கொலன்னாவை, NPP யின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட 2 நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளரே கொலன்னாவ நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டு்ளளது.

Post a Comment