கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலர் அபாயகரமான குற்றவாளிகளுடனும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடனும் தொடர்புகளைப் பேணினர். பிரதான குற்றவியல் வலைப் பின்னல்களின் தலைவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பாதாள உலகக் குழுவினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment