ஒரு யூதத் தாய் கண்ணீர் விடுவதைவிட, பாலஸ்தீனியர்கள் கண்ணீர் விடுவதே மேல்
காசாவில் தினமும் 40 முதல் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது குறித்து தான் வெளியிட்ட கருத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென் க்விர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
▪️பென் க்விர் இவ்வாறு கூறினார்: "மிகவும் நல்லது, மிகவும் நல்லது... ஒரு யூதத் தாய் தனது ராணுவ வீரரான மகனுக்காகக் கண்ணீர் விடுவதை விட, அவர்கள் (பாலஸ்தீனியர்கள்) கண்ணீர் விடுவதே மேல்."
▪️அதற்கு அந்தப் பத்திரிகையாளர் இவ்வாறு பதிலளித்தார்: "பென் க்விர் அவர்களே... நாம் உலகத்துடனும் தொடர்பில் இருப்பதால், நீங்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்."
▪️அந்த நேர்காணலின் போது, தான் "இஸ்ரேலில் உள்ள அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக" கூறிய பென் க்விர், தனது கட்சி "இஸ்ரேல் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment