Header Ads



கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா


(நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்)


உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், கல்முனை வர்த்தகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா இன்று (26) கல்முனை நகரில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், அஹ்லுல் சுன்னத்வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜலீல்(பாகவி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் மௌலவி ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி), கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், நிகழ்வில் உலமாக்கள், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




No comments

Powered by Blogger.