கப்பம் மூலம் கோடி கோடியாக சம்பாதித்த 'பஸ் லலித்'
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment