Header Ads



வெனிசுலாவில் கொள்ளையடிக்க ஒப்பந்தம் போட்ட டிரம்ப்


வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 


உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் இதுவென்றும் ஜனாதிபதி டிரம்ப் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


இந்த ஒப்பந்தம் தொடர்பாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 65 பில்லியன் பீப்பாய்கள் திறன் கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். இது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்பில் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. See less

No comments

Powered by Blogger.