Header Ads



பரீட்சை மண்டபத்தில் மதுபோதையில் அதிபரும், ஆசிரியரும்


மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு A/L பரீட்சை மண்டபத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்துள்ளார்.


பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குறித்த இருவரும் சிக்கினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.