Header Ads



நெஞ்சம் நெகிழ வைக்கின்ற காட்சி..!


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நாடு தழுவிய அளவில் ‘முஹம்மத் நபிகளார்(ஸல்) எல்லோருக்குமானவர்’ என்கிற தலைப்பில் பரப்புரை இயக்கம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது. 


இந்தப் பரப்புரையையொட்டி நபிகளாரின் அன்பும் கருணையும் கிருபையும் நிறைந்த அழகிய வாழ்வை அறிமுகப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பேரணிகள் என வெவ்வேறு தளங்களில் மாணவர்கள் மும்முரமாக இயங்கி வருகின்றார்கள்.

 

இந்த வகையில் மேற்கு வங்காளத்து எஸ்ஐஓ தோழர்கள் முதியோர் இல்லம் ஒன்றுக்குச் சென்று உணவுப் பொருட்களை விநியோகித்தார்கள். அது தொடர்பான நெஞ்சம் நெகிழ வைக்கின்ற காட்சிகள்தாம் இங்கே பகிரப்படுகின்றன. 


எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Azeez Luthfullah 

No comments

Powered by Blogger.