Header Ads



தனிப்பட்ட காரணங்களுக்காக தூதர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த சமரசிங்க


தீவிர அரசியலில் மீண்டும் நுழையும் எண்ணம் இல்லை. ஏறக்குறைய 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக தூதர் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவிவிலக அரசாங்கத்திடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் மஹிந்த சமரசிங்க  குறிப்பிட்டார். 


சமீபத்தில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த சமரசிங்க, இன்று (09) தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


தூதராக இருந்த காலத்தில், இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதிய (IMF) ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும், அமெரிக்கா விதித்த 10% வரியைத் தக்கவைக்கவும், மேலும் அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பலையும் பல உலங்கு வானூர்திகளையும் பெறவும் பாடுபட்டதாக சமரசிங்க நினைவு கூர்ந்தார்.


27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், இனி அரசியலில் ஈடுபட வேண்டாம் எனத் தான் முடிவு செய்து, இருப்பினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் கோரினால், ஆதரவளிக்கத் தான் இன்னும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.