Header Ads



நிர்வாணப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியவர்


இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கனிஷ்ட கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய நபர். குறித்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த காலப்பகுதியில், இருவரும் கையடக்கத் தொலைபேசி ஊடாக நிர்வாண காணொளிகளைப் பரிமாறிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எனினும், கடந்த 3 மாதங்களுக்கு முன்இருவருக்கும் இடையிலான காதல் உறவு முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, தன்னிடம் உள்ள குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி, அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

No comments

Powered by Blogger.