வலுவான பங்களிப்பை வழங்க கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார அறிவுறுத்தல் வழங்கினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆண்டின் இறுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது தொடர்பான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து வாகன தண்டப் பணங்களையும் ஒன்லைன் (Online) மூலம் மாத்திரம் செலுத்துவதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment