Header Ads



சிக்குவாரா கஞ்சிபானி..?


கஞ்சிபானி இம்ரானை கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கையின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான விசேட குழுவினர் இணைந்து பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கஞ்சிபானி இம்ரான் சர்வதேச குற்றக்கும்பல் தலைவராக மலேசிய காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கஞ்சிபானி இம்ரானுக்கு மலேசியாவில் உள்ள தொடர்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.