Header Ads



சேனாதிபதி - கோத்தபய உறவினால் ஏற்பட்ட நஸ்டம்


அரசுக்கு சொந்தமான ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய
சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் வருவாயில் 80 சதவீதத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு வழங்கும் வகையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தலையிட்டதாக கோப் (COPE) குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கியவராகக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு சொந்தமான அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மாதந்தோறும் சுமார் 3,20,000 அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் வகையில், அமைச்சரவை அனுமதி இன்றியே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 4 இலட்சம் அமெரிக்க டொலர் மாதாந்திர வருவாய் இழக்கப்பட்டதாகவும் கோப் குழு விசாரணையில் விளக்கப்பட்டுள்ளது.


ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நிசங்க சேனாதிபதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

No comments

Powered by Blogger.