Header Ads



ஈரான் தாக்குதல்கள் தொடர்பில் டிரம்பின் புதிய அறிவிப்பு


ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 


நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வல​ைதளத்தில் பதிவிட்டுள்ளார். 


இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.