ஷிரான் பாசிக் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி
ஷிரான் பாசிக் என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட இவர், கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

Post a Comment