Header Ads



இலங்கையில் இவ்வாறான கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இது.


சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்திய சம்பவம் தொடர்பில், பிரதான நான்கு தனியார் வங்கிகளின் 4  முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இலங்கையில் இவ்வாறானதொரு கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இது.


CID னரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த 4  பேரும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


இதன்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  


கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.