Header Ads



ஜனாதிபதியை இடையில் போக விடமாட்டோம்.


ஜனாதிபதி அநுரகுமார மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என  முஜிபுர் ரஹ்மான் MP தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவரை இடையில் போக விடமாட்டோம். எல்லாவற்றையும் விட்டுச் செல்வதாக ஜனாதிபதி அண்மையில் கூறியது வேறு அர்த்தத்தில் ஆகும். அவர் பதவியை விட்டு விலகுவதாக அர்த்தப்படுத்தவில்லை


கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்தபோது திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தியது இந்த அரசாங்கம்.


எனவே எங்களால் செய்ய முடியாதவற்றை இவர்களைக் கொண்டேனும் இந்த நாட்டு மக்களுக்கு செய்து கொள்ள வேண்டும் எனவே இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம் அவ்வாறு இவர்களைப் போக விட முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.