ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய், 24 மணித்தியாலத்திற்குள் சிகிச்சை தேவை என்கிறது ஈரான்
டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மனச்சிதைவு நோய் என்பது சிந்தனைக் கோளாறு மற்றும் யதார்த்தத்தை உணர முடியாத மனநலப் பாதிப்பு என்றும் இத்தகைய நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்கா கூறிவரும் வேளையில், ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment