Header Ads



நாட்டின் கையிருப்பு 12 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும்


சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை 'CCC' நிலையிலிருந்து 'B' அல்லது 'B+' நிலைக்கு உயர்த்த வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை 4 பில்லியன் டொலர்களாகவும், 2029 - 2031 காலப்பகுதியில் 5 முதல் 6 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


“நாட்டின் கடன் செலுத்தும் திறனை வெறும் மொத்த வெளிநாட்டு கையிருப்பை வைத்து மட்டும் கணக்கிட முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் 'கையிருப்பு போதுமான அளவு மதிப்பீடு' அளவுகோலின் படி, கடன் செலுத்தும் திறனில் பாதுகாப்பான நிலையை அடைய நாட்டின் கையிருப்பு 12 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும் என்றார். 

No comments

Powered by Blogger.