நேபாள வெள்ளத்தில் அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர், சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.

Post a Comment