நேபாளத்திற்கு நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை திட்டம்
அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக இந்நாட்டு பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளன
அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எனவே, அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடாக நாம் மிகவும் உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றோம்.

Post a Comment