டிரம்ப் பிடிவாதம் - வாபஸ் பெறப்பட்ட Red Card
அமெரிக்க வீரர் போலரின் பலோகுனின் Red Card இடைநீக்கம் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவிடம் ஜனாதிபதி டிரம்ப் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான போட்டியில் பலோகுனுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, அடுத்த போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
திங்களன்று பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் பலோகுன் விளையாடத் தகுதி பெறுவார் என்று ஃபிஃபா தற்போது அறிவித்துள்ளது.
"சரியானதைச் செய்து, ஒரு பெரும் அநீதியை மாற்றியமைத்த ஃபிஃபாவுக்கு நன்றி," என்று ஜனாதிபதி டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் கூறினார்.
இது அபத்தமானது இல்லையா..?

Post a Comment