இந்த ஆட்சி மேலும் 25 ஆண்டுகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென மக்கள் கூறுகிறார்களாம்
இந்த ஆட்சி மேலும் 20 அல்லது 25 ஆண்டுகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என மக்கள் கூறுவதாக தேவானந்த சுரவீர Mp தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட "மிகவும் கஷ்டமாக இருக்கிறது" போன்ற கோஷங்கள் தற்போது மறைந்துவிட்டது. மக்கள் இப்போது எவ்வித குறைகளையும் கூறுவதில்லை. அரசாங்கத்தின் நிவாரண வேலைத்திட்டங்கள் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
மக்கள் இப்போது கண்ணீர் சிந்துவதோ அல்லது புலம்புவதோ இல்லை. நாட்டின் விவசாயிகள் தங்களை "மன்னர்கள்" என்று நினைக்கும் ஒரு மனநிலையில் இருப்பது மிகவும் ஆரோக்கியமான விடயமாகும், கடந்த காலத்தில் சில குழுக்களால் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த கௌரவத்தை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

Post a Comment