Header Ads



ஈரானின் உச்ச தலைவர் மரணத்திற்காகக் குறிவைக்கப்பட்டுள்ளார்


ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மரணத்திற்காகக் குறிவைக்கப்பட்டுள்ளார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்ததைத் தொடர்ந்து, எந்தவொரு இஸ்ரேலியத் தாக்குதலுக்கும் ஈரான் உடனடியாக சக்திவாய்ந்த பதிலடியை வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.


 தனது நட்பு நாடான இஸ்ரேலை அமெரிக்கா கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், டெல் அவிவில் உள்ள தனது கூட்டாளிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், அவர்கள் பேச்சைக் கேட்காவிட்டால் ஈரான் அவர்களுக்குப் பாடம் புகட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.