Header Ads



வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்காக அநுரகுமார வழங்கிய அதிரடி அறிவுறுத்தல்


வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார  சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினார்.


 ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24)  இடம்பெற்ற, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

No comments

Powered by Blogger.