எனது வீட்டு மின்சாரத்தை துண்டித்தது ஏன்..? உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ள வழக்கு
மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment