Header Ads



தோல்வி கொடுத்த வலி மிகவும் கடுமையானது, இந்தக் காயம் ஆற காலம் எடுக்கும் - மெஸ்ஸி


“தோல்வி கொடுத்த வலி மிகவும் கடுமையானது. இந்தக் காயம் ஆற காலம் எடுக்கும்,” என்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வி குறித்து அர்ஜெண்டினா கால்பந்து அணியின் மெஸ்ஸி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


இந்நேரத்தில் சில நல்ல விஷயங்களை நினைவில் கொள்கிறேன். பின்னடைவில் இருந்து அபாரமாக ஆடி ஆட்டத்தில் திருப்புமுனை கொடுத்த அந்த அற்புத தருணங்கள் என்றென்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும்.


அணியின் கடின உழைப்பு மற்றும் அதற்கான முயற்சி மட்டுமல்லாது தேசத்தின் ஒட்டுமொத்த ஆதரவுடன் உலகின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளோம். நம் சாதனைகளை இப்போது முழுவதுமாக பாராட்டுவது சற்று கடினம். ஆனால், தொடர்ந்து இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளோம் என்பதை குறிப்பிடுகிறேன்.


உங்களது வாழ்த்துக்கும், மெசேஜுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நாம் அர்ஜெண்டினாவை சேர்ந்தவர்கள்’ என பெருமிதத்துடன் மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் நம்மால் ஒன்றாக நிற்க முடிந்தது.


சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு எனது வாழ்த்துகள்” என்று மெஸ்ஸி அதில் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.