இந்த மோசடி எவ்வாறு நடைபெறுகிறது...?
நீங்கள் அத்தகைய ஆர்டரை ஒருபோதும் செய்யவில்லை என்று கூறினாலும், அவர்கள் தொடர்ந்து பல நாட்கள் உங்களுக்கு அழைப்புகளையும் செய்திகளையும் அனுப்புவார்கள். பின்னர், அந்த ஆர்டரை ரத்து செய்ய தாங்கள் அனுப்பும் இணைப்பை (Link) அழுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் உங்கள் சாதனத்தில் தோன்றும் குறியீடு அல்லது எண்ணை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள்.
ஆனால், இந்த செயல்முறையின் மூலம் உங்கள் கைப்பேசி அல்லது கணினிக்கான தொலைநிலை (Remote) அணுகலை மோசடிக்காரர்களுக்கு வழங்குகிறீர்கள் என்பதை பலர் உணருவதில்லை. சில சந்தர்ப்பங்களில், அந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் Android சாதனங்களில் APK போன்ற தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware)
நிறுவப்பட்டு, உங்கள் சாதனத்தின் முழுமையான கட்டுப்பாடும் தாக்குதலாளர்களின் கைக்குச் செல்லக்கூடும்.
எந்த இணைப்பையும் அழுத்துவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபாருங்கள். ஒரு சிறிய கவனக்குறைவு கூட பெரும் நிதி இழப்புகளுக்கும் தனிப்பட்ட தகவல் கசிவிற்கும் வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Post a Comment