எனக்கும், மனைவிக்கும் கொலை மிரட்டல்கள்
இஸ்ரேல் மற்றும் காசா போர் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தனக்கும் தனது மனைவிக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்தார்.
'ரோலிங் ஸ்டோன்' (Rolling Stone) இதழுக்கு அளித்த பேட்டியில் மம்தானி, "கொலை மிரட்டல்களை எதிர்கொள்ளத் தயாராவது கடினம்; ஆனால், அனைவருக்காகவும் குரல் கொடுக்கத் துணியும்போது அதற்கான விளைவுகளைச் சந்திக்கத்தான் நேரிடும்," என்று கூறினார்.
இஸ்ரேல் மற்றும் காசா குறித்த கருத்துகளால் தனது மனைவியும் விமர்சனங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment