முஸ்லிம் நாடுகள் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜோர்டான், பாகிஸ்தான், கத்தார், சவுதி, UAE ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய தீவிரவாத அமைச்சர்கள் மற்றும் குழுக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மற்றும் தீவிரவாதத் தூண்டுதல்கள், வெறுப்புணர்வைத் தூண்டும் அழைப்புகள் மற்றும் வன்முறைச் செயல்களை அமைச்சர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் மற்றும் அங்குள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீது இஸ்ரேலுக்கு எந்தவித இறையாண்மையும் இல்லை என்பதை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெருசலேமில் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்களுக்கு எதிரான தொடர்ச்சியான மீறல்கள் மற்றும் சட்டவிரோத நடைமுறைகள், அத்துடன் அப்பனிதத் தலங்களின் புனிதத்தன்மையை மீறும் செயல்கள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலை நிர்ப்பந்திக்கும் வகையில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

Post a Comment