ஊழல் தடுப்பு பொலிஸ் காவலரின் மரணத்திற்கு பேஸ்புக் காரணமா..?
இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் நேற்று பிரதான வாயில் கடமைக்காக மற்றுமொரு அதிகாரியுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இயற்கை உபாதையை கவனிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் வந்து, அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் காவலர் உடனடியாக பாணந்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கரை வருட சேவைப் காலத்தைக் கொண்டுள்ள காவலர், பேஸ்புக் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment