Header Ads



போதைப் பொருள் கடத்தமுயன்ற கனடா காரன் பிடிபட்டான்


கட்டுநாயக்க,   விமான நிலையத்தில் இன்று (26)  பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி ஒன்றை இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முறியடித்துள்ளனர். 


டொராண்டோ நகரில் இருந்து தோஹா வழியாக கட்டார எயார்வேஸ் ) விமானம் மூலம்  இலங்கையை வந்தடைந்த 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


ஓவியரான நபர் கொண்டு வந்த 2  பயணப் பொதிகளையும் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்திய போது, அவற்றினுள் பழுப்பு நிறத்திலான 80 ஹாஷிஸ் போதைப்பொருள் பலகைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 


சுமார் 20.117 கிலோகிராம் எடையுடைய இந்தப் போதைப்பொருள் தொகையின் சந்தைப் பெறுமதி சுமார் 201.89 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.