கடவுச்சீட்டு குறித்து வெளியான தகவல்
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் 65,351, பெப்ரவரியில் 54,161, மார்ச்சில் 50,356 கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 169,868 ஆகும். எனினும், 2025 ஜனவரியில் 53,216, பெப்ரவரயில் 74,402 மற்றும் மார்ச்சில் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, குறித்த காலாண்டில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 204,746 ஆகும்.

Post a Comment