Header Ads



பெருந்தொகை சிகரெட்டுகளுடன் சீனர் கைது


ரூபாய் அறுபது லட்சத்து முப்பதாயிரம் (ரூ. 6,030,000) மதிப்புள்ள வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, காட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் "பச்சைப் பாதை" (Green Channel) வழியாக வெளியேற்ற முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர் இன்று (07/25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீன நாட்டவர் ஆவர். இவர் இன்று (07/25) அதிகாலை 12.55 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 'ஏர் ஏஷியா' (AirAsia) விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் காட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 


இதன்போது, அவர் கொண்டு வந்த 02 பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகள் அடங்கிய 201 சிகரெட் அட்டைப்பெட்டிகள் (Cartons) மறைத்து வைக்கப்பட்டிருந்தன. காட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் தற்காப்பில் வைத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.