நாமலை சிறையில் அடைப்பது இலகுவானதில்லையா..?
தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவேளை அப்படி நடந்தாலும் கூட கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எந்தவித தடங்கலும் இன்றி முன்னெடுத்துச்செல்வதற்கான அனைத்து திட்டங்களும் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குக் கட்சி கிராம அளவிலும் மாவட்ட அளவிலும் பலமாக அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment