இலங்கைக்கு கைகொடுக்கப் போகும் அமெரிக்கா
நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிராகச் செயல்படும் தேசிய திறனை மேம்படுத்துவதற்கும், அமெரிக்கா உதவுவதற்கு முன்வந்துள்ளது.
அதற்கமைய, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து விசேட "பொது சுகாதார பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய்க்காவி மூலம் பரவும் நோய்கள் ஒழிப்புத் திட்டத்தை" ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் மற்றும் குடிமக்கள் உதவி திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், அமெரிக்க பசிபிக் இராணுவம் மற்றும் 18 ஆவது தியேட்டர் மெடிக்கல் கமாண்ட் ஆகியவற்றின் தடுப்பு மருத்துவம், பூச்சியியல், நோய் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நுளம்பு ஒழிப்பு நிபுணர்கள், இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment