Header Ads



இந்த அரசாங்கம் வீடு செல்லும் காலம் வரக்கூடும் - சஜித்


விவசாயிகளை இழிவுபடுத்தும் இந்த அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  அநுராதபுரம் நாச்சியாதீவு பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். 


இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும், தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.  அன்று 5,000 ரூபாய் உரம் வேண்டாம் என்று கூறி அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். 


நமது நாட்டு விவசாயிகளை கசிப்புக்காரன் என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும் இந்த அரசாங்கத்தின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். S

No comments

Powered by Blogger.