Header Ads



ஜனாதிபதியின் Ambulance வண்டி முல்லைத்தீவு மருத்துவமனைக்கு


ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு (Ambulance) வண்டியொன்று, முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை மற்றும் நோயாளி போக்குவரத்துச் சேவைகளை வலுப்படுத்துவதற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இந்த நோயாளர் காவு வண்டி ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிடம் (PSD) ஒப்படைக்கப்பட்டிருந்தது.


எனினும், தற்போது இது உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருந்ததால், நாட்டின் சுகாதாரச் சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த வாகனத்தைச் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்க ஜனாதிபதி செயலகம் தீர்மானித்தது.

No comments

Powered by Blogger.