பணம் பறிக்கும் சட்டத்தரணிகள் - நீதியரசர் கூறிய சோகமான சம்பவம்
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சகோதரரின் கொலை வழக்குக்காக சட்டத்தரணிகளின் கட்டணங்களை ஆரம்பத்தில் தன் கையில் இருந்த பணத்தில் செலுத்தியுள்ளார்.
பின்னர் கையில் இருந்த பணம் தீர்ந்ததும், அவர்கள் வசித்து வந்த காணியை அடகு வைத்துள்ளார். அவரிடம் அடகு வைப்பதற்கு வேறு எந்தவொரு சொத்தும் இல்லை. தனது சகோதரரின் வழக்குக்காக திறமையான சட்டத்தரணிகள் குழுவொன்றின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக, தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுப் பணம் பெற்று, சட்டத்தரணிகளின் கட்டணத்தைச் செலுத்த அவர் தீர்மானித்துள்ளார்.
பெரும்பான்மையானோர் இவ்வாறு தமது விருப்பத்துடனோ அல்லது இலகுவாகவோ செய்வதில்லை. சட்டத்தரணிகளின் கட்டணங்களை இலங்கை அரசாங்கத்தினாலோ அல்லது உயர் நீதிமன்றத்தினாலோ ஒழுங்குபடுத்த முடியாது.
அது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வும் அல்ல. உங்கள் மனச்சாட்சிக்கு இணங்க, கட்சிக்காரரால் செலுத்தக்கூடிய கட்டணத்தை கருத்தில் கொண்டு, மிகவும் நியாயமானதொரு கட்டணத்தை சட்டத்தரணிகளால் தீர்மானிக்க முடியும்.
இல்லையென்றால் தனது தொழில்முறை சேவைகளில் ஆகக்குறைந்தது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையாவது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
அத்தோடு சொத்து பிரிவினை வழக்குகளை எடுத்துக்கொண்டால், மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல், முதலாவது மேன்முறையீடு, இரண்டாவது மேன்முறையீடு மற்றும் அவற்றுக்கு இடையில் திடீரென தாக்கல் செய்யப்படும் (Revisions) என பல விடயங்கள் உள்ளன.
அந்த முழு செயல்முறையும் முடிவடைந்து உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் போது, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து சராசரியாக 47 வருடங்கள் கடந்துவிடுகின்றன.
எனவே, இதில் கணிசமான காலதாமதம் நிலவுகிறது என்பதை நாம் உறுதியாகக் கூற முடியும். அடுத்து, நீதியை நிலைநாட்டும் பொறிமுறைக்குள் பிரவேசிப்பதற்கு பல தடைகள் காணப்படுகின்றன அவை நிர்த்திக்கப்பட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

Post a Comment